மலேசியாவுக்கு ரோஹிங்யாக்கள் படகில் பயணம்

மலேசியாவுக்கு ரோஹிங்யாக்கள் படகில் பயணம்

fallback

15 Apr 2018 - 6:00 am

1 mins read

கோலாலம்பூர்: படகு ஒன்றில் 70 ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மாரிலிருந்து மலேசியா வுக்கு கட்ந்த வாரம் அபாய கரமான கடல் பயணம் மேற் கொண்டதாக மனித உரிமைக் குழுக்கள் இரண்டு குறிப்பிட்டு உள்ளன. ராக்கைன் பகுதியில் வசிக்கும் ரோஹிங்யாக்கள் மே மாதவாக்கில் ஏற்படும் புயலால் ஏற்படும் உயிர்ச்சேதங்களுக்கு அஞ்சி மலேசியாவுக்குச் செல் கின்றனர். இம்மாதத்தில் ரோஹிங்யாக்கள் செல்லும் இரண்டாவது படகு இது என்று கூறப்படுகிறது. அந்தப் படகு அடுத்த வாரம் மலேசியா சென்று சேரும் என்று எதிர்பார்ப்பதாக 'ஃபோர்டிஃபை ரைட்ஸ்' எனும் அமைப்பின் இணை நிறுவனர் மேத்யூ ஸ்மித் கூறியுள்ளார்.

இது மிகவும் அபாயகரமான பயணம் என்று குறிப்பிட்ட திரு மேத்யூ, உணவு, குடிநீரின்றி போதிய இடவசதி இன்றி மேற்கொள்ளப் படும் அந்தப் பயணத்தின்போது படகு மூழ்கக்கூடிய அபாயமும் உண்டு என்றார். அந்தப் படகு பருவநிலை காரணமாகவோ அல்லது அதிகாரிகளின் நடவடிக்கைகள் காரணமாகவோ தாய்லாந்து அல்லது இந்தோனீசியாவுக்கு செல்லக்கூடும் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. அந்தப் பட கில் 19 ஆடவர், 17 பெண்கள், 12 சிறுமிகள், எட்டு சிறுவர்கள் இருந்ததாக கடலோரக் காவல்ப டை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.