அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க சீன சமூக ஊடகங்களில் கோரிக்கை

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க சீன சமூக ஊடகங்களில் கோரிக்கை

1 mins read

பெய்ஜிங்: சீனா, அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் வலுப்பெற்று வரும் நிலையில் மெக்டோனல்ட்ஸ் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களைப் புறக்கணிக்கக் கோரி சீனாவில் சமூக ஊடகச் செய்திகள் பரவின. 'விசேட்', 'வெய்போ' போன்ற சமூக ஊடகங்களில் மெக்டோனல்ட்ஸ், கேஎஃப்சி, ஆப்பிள்'ஸ் ஐஃபோன் போன்றவற்றைப் புறக்கணிக்கக் கோரிய குறுந்தகவல்கள் அதிகம் பகிரப்பட்டிருந்தன. அமெரிக்க பொருட்களைப் புறக்கணித்து உள்ளூர் தயாரிப்புகளை வாங்கும்படி அந்தத் தகவல்களில் குறிப்பிடப்பட்டிருந்தன. இருப்பினும், மெக்டோனல்ட்ஸ் போன்ற கடைகளில் விற்பனை அவ்வுளவு தூரம் குறைந்ததாகத் தெரியவில்லை என ஏஎஃப்பி குறிப்பிட்டது.