எகிப்தில் அவசரநிலை நீட்டிப்பு

1 mins read

கெய்ரோ: எகிப்தில் அவசர நிலையை மேலும் மூன்று மாதங்களுக்கு அந்நாட்டு அதிபர் அப்டெல் ஃபட்டா அல்-சிசி நீட்டித்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நான்காவது முறையாக அது நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரண்டு தேவாலயங்களில் ஐஎஸ் அமைப்பினர் நடத்திய குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 45 பேர் பலியானதை அடுத்து அவசரநிலை நடப்புக்கு வந்தது. எகிப்தின் ஐஎஸ் பிரிவு இருக்கும் வடக்கு சினாய் பகுதியில் இரவுநேர ஊரடங்கு உத்தரவை அந்நாட்டுப் பிரதமர் ஷெரிஃப் இஸ்மாயில் நீட்டித்துள்ளார்.