'தமிழர் பகுதிகளில் இன்னமும் சிங்களர் ஆக்கிரமிப்பு உள்ளது'

'தமிழர் பகுதிகளில் இன்னமும் சிங்களர் ஆக்கிரமிப்பு உள்ளது'

1 mins read

இலங்கையில் தமிழர்களின் உடை மைகளை இன்னமும் சிங்களர் கள் சட்டவிரோதமாக ஆக்கிர மித்துக்கொண்டு இருக்கிறார் கள் என்றும் அவர்களை அகற்று வதற்கு அரசாங்கம் ஆக்ககர மான செயல் எதையும் நடை முறைப்படுத்தவில்லை என்றும் அந்த நாட்டின் வடக்கு மாநில முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து இருக்கிறார். நாட்டைவிட்டு ஓடிய 10 லட் சத்துக்கும் அதிக தமிழர்களை மறுபடியும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் குற்றாலத்தில் நடந்த சித்திரைத் திருவிழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர் களிடம் பேசினார். இலங்கையில் நடந்த உள் நாட்டுப் போரின்போது தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உடைமைகளை விட்டுவிட்டு தமி ழர்கள் பலரும் ஓடிவிட்டார்கள் என்றும் அவர்களின் சொத்து களைச் சிங்களர்கள் ஆக்கிர மித்துக்கொண்டதாகவும் தெரி வித்த விக்னேஸ்வரன்,

இத்தகைய சட்டவிரோத சிங்களர் களை அகற்ற அரசாங்கம் எதை யுமே செய்யவில்லை என்றார். வடக்கு மாகாணப் பகுதி களில் உள்ள 1.5 லட்சம் வீரர் களை அப்புறப்படுத்த ராணுவம் மறுத்து வருகிறது என்றார் அவர். இலங்கை பிளவுபடுவதைத் தாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறிய அவர், இந்திய-இலங்கை உறவு முந்தைய நிலையைப் போல இப்போது இல்லை என்றும் சீனாவுடன் இலங்கை மிகவும் நெருங்கிவருவதாகவும் தெரி வித்தார். இலங்கை அரசு, தமி ழருக்குப் பாதகமாகச் செயல் படுவதைத் தடுக்க தாங்கள் முயன்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.