மலேசியத் தேர்தலில் 'இலவச' வாக்குறுதி

மலேசியத் தேர்தலில் 'இலவச' வாக்குறுதி

1 mins read
Google News Preferred Icon

மலேசியாவில் பொதுத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஆளும் கட்சியும் எதிர்த்தரப்பும் 'இலவச' வாக்குறுதிகளை அள்ளிவிடுகின் றன. பிரதமர் நஜிப் ரசாக் சென்ற வெள்ளிக்கிழமை இலவச எரி பொருள் அட்டை பற்றிய ஓர் அறிவிப்பை விடுத்தார். இந்த அட்டைகளைப் பெற டாக்சி ஓட்டுநர்கள் முண்டியடித் ததில் முதல் நாளே 30 பேர் காயம் அடைந்துவிட்டனர். டாக்சி ஓட்டுநர்கள் 800 ரிங்கிட்(S$270) மதிப்புள்ள இலவச எரிபொருள் அட்டையைப் பெற்றுக் கொள்ள இன்னும் மூன்று மாத காலஅவகாசம் இருக்கிறது என்று அதிகாரிகள் இப்போது தெரி வித்து இருக்கிறார்கள். இந்தத் திட்டம் சாபாவிலும் சரவாக்கிலும் விரைவில் தொடங் கப்படும். என்றாலும் இந்த அட் டைகளை அடுத்த மாதம் 9ஆம் தேதி நடக்கும் தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி யைப் பிடித்தால்தான் பயன்படுத்த முடி யும் என்று கூறப்படுவது தவறு என அதிகாரிகள் விளக்கினர். வாழ்க்கைச்செலவே தேர்தல் பிரசாரத்தின்போது பெரும் பிரச் சினையாக இருக்கும் என்று அர சியல்வாதிகளும் பகுப்பாய்வாளர் களும் கணித்து இருக்கிறார்கள். இந்நிலையில், ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் வாக்குகளைக் கவரும் வகையில் இலவச சலுகை கள் பற்றிய வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றன.