வாஷிங்டன்: சிரியாவின் நிர்வாகம், ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத் திய தாகக் கூறப்பட்டதை அடுத்து அமெரிக்கா தலைமையில் அங்கு நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்கு தல் துல்லியமான வெற்றியைப் பெற்றிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன், பிரான்ஸ் தலை வர்கள் தெரிவித்தனர். அது போன்று மீண்டும் தாக்கு தலைச் சந்திக்க நேரிடும் என்று சிரியாவை அவர்கள் எச்சரித்தனர். சிரியாவில் செயல்படக்கூடிய ரசா யன ஆயுத நிலைகளைக் குறி வைத்து விடிகாலை நேரத்தில் நடத்தப்பட்ட அந்தத் துல்லியமான தாக்குதலை ரஷ்யா கடுமையாக குறைகூறியது.
ஆனால் அமெரிக்கா தலைமை யிலான அந்தத் தாக்குதலை கண்டிக்கும்படி ஐநா பாதுகாப்பு மன்றத்தில் ரஷ்யா எடுத்த நட வடிக்கைக்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டூமா என்ற நகரில் ஒரு வாரத்திற்கு முன் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்ட தாகச் சந்தேகிக்கப்படுகிறது. அந்தத் தாக்குதலில் 40 பேருக் கும் மேற்பட்ட மக்கள் மாண்டுவிட் டார்கள். அத்தாக்குதலைக் கண் டிக்கும் வகையில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவில் இரவு நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தின. சிரியாவின் டூமா நகரில் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் நச்சு வாயுக்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று வாஷிங்டன் நம்புவதாக அமெரிக்க நிர்வாக அதிகாரி ஒருவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். இதனை சிரியாவின் அதிபர் அரசும் அவருக்கு ஆதரவு அளித்து வரும் ரஷ்யாவும் மறுத் தன. சிரியாவில் மேற்கத்திய நாடு களின் தாக்குதல் நடவ டிக்கையை மாஸ்கோ கடுமையாக கண்டித்தது. இருந்தாலும் ரஷ்யா ராணுவ ரீதியில் பதில் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

