புதிய விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் ஆர்ப்பாட்டம்

புதிய விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் ஆர்ப்பாட்டம்

1 mins read
4493ee15-0bb4-41d0-b29e-ff41c82b48c6
-

பிரான்சின் மேற்குப் பகுதியில் மிகப்பெரிய விமான நிலையம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கும் இடமாக மாறியுள்ளது. அங்கு அவர்கள் முகாம்களை அமைத்து தங்கியுள்ளனர். அங்கு விமான நிலையம் கட்டினால் பெரும் சத்தமாக இருக்கும் என்றும் அத்துடன் வனவிலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அந்த இடத்தில் விமான நிலையம் கட்டும் திட்டத்தை அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் ரத்து செய்தது. இது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கிடைத்த வெற்றி என்ற போதிலும் அவர்கள் அந்த இடத்தை விட்டுச் செல்ல மறுத்து வருகின்றனர். இதனால் போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தினரை கலைக்க முயன்றனர். படம்: ஏஎஃப்பி