வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் ஜேம்ஸ் கோமி, அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதி யானவர் அல்லர் என்று கூறியுள் ளார். பெண்களை ஒரு பொருட் டாகவே அவர் மதிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு திரு கோமியை பதவியிலிருந்து அதிபர் டிரம்ப் நீக்கினார். அதன்பிறகு முதல் முறையாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டிரம்ப்பை அவர் கடுமை யாக விமர்சித்துள்ளார். டிரம்ப் தொடர்ந்து பொய் பேசு வதாகவும் நீதிக்கு இடையூறாக இருப்பதாகவும் ஏபிசிக்கு அளித்த பேட்டியில் கோமி கூறினார். ஆனால் இந்த பேட்டி வெளி யாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பேசிய அதிபர் டிரம்ப், கோமியிடம் ஏராளமான பொய்கள் கொட்டியுள்ளதாகக் கூறியிருந்தார். ஞாயிறு இரவு ஏபிசியின் 20/20 நிகழ்ச்சிக்கு கோமி பேட்டியளித் திருந்தார்.
"திரு டிரம்ப் செயல்திறன் அற்றவர் அல்லது மறதி நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
"ஆனால் பதவிக்குரிய தகுதி அவரிடம் இல்லை. "நம் நாட்டின் முக்கிய பண்புகளை நமது அதிபர் மதிக்க வேண்டும். "அதில் மிகவும் முக்கிய மானது உண்மை பேசுவது. இதை அதிபரால் கடைப்பிடிக்க முடிய வில்லை," என்று கோமி குறிப் பிட்டார். திரு கோமியின் தொலைக் காட்சி பேட்டிக்குப் பிறகு டிரம்ப் தரப்பிலிருந்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமது புதிய நூலைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கோமி, புத்தகத்தை விற்பதற்காக எதையும் சொல்வார் என்கின்ற அவரது மோசமான நடத்தையை காட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

