தோக்கியோ: ஆசியாவின் பரம வைரிகளான சீனாவும் ஜப்பானும் தங்களுடைய உறவில் புதிய அத் தியாயத்தைத் தொடங்கியுள்ளன. ஜப்பானுக்கு அரிய பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இரு நாடு களுக்கு இடையிலான உறவில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி யுள்ளார். வடகொரியாவின் ஏவுகணை மிரட்டலுக்கு இடையே சீனாவும் ஜப்பானும் வரும் காலங்களில் சேர்ந்து செயல்படவும் உறுதி பூண்டுள்ளன. தலைநகர் தோக்கியோவுக்கு முதல்முறையாக வருகையளித்த திரு வாங் யி, ஜப்பானிய வெளி யுறவு அமைச்சரை சந்தித்து அள வளாவினார். புதிய தொடக்கப் புள்ளியில் இருவரும் உள்ளோம். இருதரப்பு ஒத்துழைப் பில் புதிய எதிர்காலத் தைத் தொடங்கிவைத்து இரு நாட் டையும் மேலும் மேம்படுத்த முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
வளர்ச்சி, மேம்பாடு ஆகிய வற்றுக்கான முக்கிய நிகழ்வில் இரு தரப்பு உறவு அடியெடுத்து வைத்துள்ளது என்றும் அரிய பயணம் மேற்கொண்டு தோக்கி யோவுக்கு வந்துள்ள சீன அமைச் சர் கூறினார். வடகொரியா, தென்கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே உறவில் பல மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்தினால் தோக்கியோ- பெய் ஜிங் நல்லுறவு எதிரும் புதிருமாக இருந்து வந்துள்ளது. வடகொரியா விவகாரத்தில் பெய்ஜிங் முக்கிய பங்காற்ற முடியும் என்று மற்ற நாடுகள் நம்புகின்றன. இதற்கிடையே பிரதமர் ஷின் சோ அபே, சீன பிரதமர் லி கெச் சியாங், தென்கொரிய அதிபர் மூன் ஜே உன் ஆகியோர் அடங் கிய முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஜப்பானிய தரப்பினர் முயற்சி செய்து வருகின்றனர். திரு அபே, அதிபர் ஸி ஜின் பிங்கின் இரு தரப்பு பயணத்துக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

