கோலாலம்பூர்: மலேசியாவில் தேர்தல் நெருங்கும் வேளையில் முன்னாள் பெண் அமைச்சர்கள் இருவர் தங்களின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி யுள்ளனர். ஒருவர் முன்னாள் அம்னோ மகளிர் அணித் தலைவர் ரஃபிடா. மற்றொருவர் தற்போதைய மகளிர் அணித் தலைவர் ஷரிசாட் ஜலில். இவர்கள் இருவருமே மலேசிய அரசியலில் பிரபலமானவர்கள். திரு மகாதீர் பிரதமராக இருந்தபோது திருமதி ரஃபிடா 21 ஆண்டுகள் அனைத்துலக வர்த்தக தொழில் அமைச்சராக இருந்தவர். இவர் அண்மையில் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கை கடுமையாகக் குறை கூறியிருந்தார். தற்காப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த நிலம் தொடர்பான பிரச்சினையில் திரு நஜிப்பை அவர் சாடியிருந்தார்.
தற்போது பொதுமக்களின் அக்கறைக்குரிய விஷயங்களைப் பேசுவதற்கு தனக்கு உரிமை இருப்பதாக ரஃபிடா கூறியுள் ளார். அம்னோ மகளிர் அணியின் தற்போதைய தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில், எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் பண்டார் துன் அப்துல் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுவதை மறுத்தார். "பலர் என்னிடம் வந்து பண்டார் துன் அப்துல் ரசாக்கில் போட்டியிடுவீர்களா என்று வினவுகிறார்கள்.
"இல்லை என்பதே என்னுடைய பதில். இவ்வளவுக் கும் பண்டார் துன் அப்துல் ரசாக் தேசிய முன்னணி வெற்றி பெறக்கூடிய இட மாகும்", என்றும் அவர் கூறினார். 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டி யிடாமல் ஒதுங்கி இருந்த ஷரிசாட், எதிர்வரும் தேர்தலில் போட்டி யிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் லெம்பா பந்தாயில் போட்டியிட்ட ஷரிசாட் ஜலில் கெஅடிலான் கட்சியின் அறிமுக வேட்பாளர் நூருல் இஸ்ஸா அன்வாரிடம் தோற் றார்.

