ஜோகூர்பாரு: வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து ஜோகூருக்கு வரும் ஆயிரக் கணக்கான வாக்காளர்களுக்கு உதவும் பொருட்டு எதிர்க்கட்சி கள் இலவச பேருந்து வசதியை வழங்கவிருப்பதாக ஜோகூர் ஜனநாயக செயல் கட்சி தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 10 பேருந்துகள் மே மாதம் 9ஆம் தேதியன்று வாக்காளர்களுக்கு இந்த இலவச சேவைகளை வழங்க வுள்ளன. சிங்கப்பூரில் இருந்து அன்றைய தினம் ஜோகூருக்கு வருவதற்கான பேருந்து டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அறி விக்கப்பட்டதைத் தொடர்ந்து தாங்கள் இந்த மாற்று ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக ஜசெகவின் பிரசாரக்குழு இயக்குநர் ஜார்ஜ் போ தெரிவித்துள்ளார்.
மக்கள் வழங்கிய நிதியுதவிடன் இந்தப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்துப் பகாட், சிகாமட், குளுவாங் மற்றும் மூவார் ஆகிய இடங் களுக்கு இந்தப் பேருந்துகள் சேவை மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார். இந்தச் சேவைகள் ஒருவழி சேவைகளாகும். ஏனெனில், வாக்காளர்கள் எப்போது மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்புவார்கள் என்று தெரியாது எனபதால் தங்களால் ஒருவழிச் சேவையே வழங்க முடிந் திருப்பதாக அவர் கூறினார்.
பாஸ் கட்சியும் வாக்களிப்பு நாளன்று இலவசமாக வாக் காளர்களை காரில் அழைத்துச் செல்லவிருப்பதாக அறிவித் துள்ளது. வாக்காளர்களுக்கு இதே சேவையை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ஜோகூர் அமனா கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க் கட்சிகளின் இலவச சேவையை வரவேற்பதாகக் கூறிய பிகேஆர் இத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று கூறியது.

