ரசாயன ஆயுத நிபுணர்கள் டூமா நகரைப் பார்வையிட சிரியா அனுமதி

ரசாயன ஆயுத நிபுணர்கள் டூமா நகரைப் பார்வையிட சிரியா அனுமதி

1 mins read
93e9128d-49dc-49c6-aa3d-5228c79d63b3
-

மாஸ்கோ: சிரியாவில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டூமா நகரை ரசாயன ஆயுத நிபுணர்கள் பார்வையிடவும் சோதனை செய்யவும் அனுமதியளிக்கப் பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித் துள்ளது. கடந்த சனிக்கிழமை சிரியா வின் டமாஸ்கஸ் நகரை சென்று அடைந்த ரசாயன ஆயுத நிபுணர்கள் அந்நகரை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. பாது காப்பு காரணங்களுக்காக அவர் களை அங்கு செல்ல அனுமதிக்க வில்லை என்று ரஷ்யா கூறிய்து, ஆனால் சிரியாவும் ரஷ்யாவும் சேர்ந்து ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான தடயங்கள் கிடைக்காமல் இருக்க ஏதேனும் ஏற்பாடுகள் செய்யக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் அனைத்துல ரசாயன ஆயுத நிபுணர்கள் இன்று டூமா நகரைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரசாயன ஆயுதங்களைத் தடை செய் வதற்கான அமைப்பின் ஆய் வாளர்கள், ஆய்வுப் பணியை தொடங்குவதற்காக காத்திருக் கின்றனர். சிரியாவில் ரசாயன தாக்குதல் நடக்கவில்லை எனச் சிரியாவும் ரஷ்யாவும் கூறி யுள்ளன.

கிழக்கு கெளட்டா பகுதியிலிருந்து கிளர்ச்சியாளர்கள் அனைவரும் விரட்டப்பட்டுவிட்டதாக சிரியா ராணுவம் அறிவித்த நிலையில் டூமா நகரம் சீரழிந்த நிலையில் காணப்படுகிறது. படம்: ஏஎஃப்பி