நஜிப்: கட்சி உறுப்பினர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்

நஜிப்: கட்சி உறுப்பினர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்

1 mins read

சிறப்பு சந்திப்பு நட்திய மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தேசிய முன்னணியின் சார்பில் இதுவரை சிறப்பாக செயலாற்றி விடைபெறும் உறுப்பினர்களின் சேவையைப் பாராட்டிய திரு நஜிப், அவர்கள் ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். "இந்தப் பொதுத்தேர்தலில் சிலர் மீண்டும் வேட்பாளராக நிய மிக்கப்படலாம். வேட்பாளர்கள் பட்டியலில் சிலர் இடம் பெறாமல் போகலாம். எது நடந்தாலும், தேசிய முன்னணி உறுப்பினர்கள் ஒற்றுமையுடனும் விசுவாசத்துடனும் இருக்க வேண்டும்," என்று திரு நஜிப் கேட்டுக்கொண்டார்.

தேசிய முன்னணி நாடாளு மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு ஸ்ரீ பெர்டானாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் திங்கட் கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி 30 நிமிடங்கள் வரை நீடித்தது. அந்த சந்திப்பில் தேசிய முன்னணி எம்பிக்கள் 130 பேர் கலந்துகொண்டனர். தேசிய முன்னணிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவைத் திரட்டும் நோக்கத்திலும் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப் பினர்களிடம் ஒற்றுமை மற்றும் விசுவாசத்தை வலியுறுத்தவும் கடைசி முயற்சியாக திரு நஜிப் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் தங்களிடம் கேட்டுக்கொண் டதாக அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப் பினர்கள் சிலர் செய்தி யாளர்களிடம் தெரிவித்தனர்.