வாஷிங்டன்: அமெரிக்க புல னாய்வுத் துறை இயக்குநர் மைக் போம்பியோ வடகொரியாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் தலைவர் கிம்மை சந்தித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் கிம்மும் நேரடியாகச் சந்திப்பது குறித்து அவர்கள் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இம்மாதத் தொடக்கத்தில் ரகசிய சந்திப்பு நடைபெற்றது என்று பெயர் தெரிவிக்க விரும் பாத அதிகாரி ஒருவர் குறிப் பிட்டார். வடகொரியத் தலைவர் கிம் முடன் நேரடி பேச்சுவார்த்தையில் பங்கேற்க தாம் தயாராக இருப் பதாக சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறி வித்திருந்தார்.
இதனை உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர் பார்க்கின்றன. இதற்கிடையே ரகசியச் சந்திப்பு பற்றி டுவிட்டரில் தமது கருத்தைப் பதிவிட்டுள்ள அதிபர் டோனல்ட் டிரம்ப், 'நல்லுறவு பிறந்துள்ளது' என்று கூறினார். அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடை பெற்றுள்ளது என்றார் அவர். செவ்வாய்க்கிழமை ரகசியச் சந்திப்பு பற்றிய தகவல் வெளி யானது. அதிபர் டிரம்ப்-கிம் பேச்சுக்கான ஆயத்த வேலைகள் குறித்து விவாதிப்பதே சந்திப்பின் நோக்கம் என்று தெரிவிக்கப் பட்டது. இதனிடையே அமெரிக் காவுக்கு வருகையளித்துள்ள ஜப் பானிய பிரதமர் ஷின்சோ அபேயை அதிபர் டிரம்ப் வரவேற்று உபசரித்துள்ளார்.
அப்போது கிம்முடன் அமெரிக்க புலனாய்வுத் துறைத் தலைவர் நடத்திய ரகசிய பேச்சை அவர் உறுதிசெய்தார். மேலும் தென்கொரியாவும் வட கொரியாவும் அமைதி உடன்பாடு குறித்து பேச்சு நடத்துவதற்கு தாம் ஆசிகளை வழங்கியுள்ளதாக வும் அவர் கூறினார். முன்னைய விரோதிகளான தென்கொரியாவும் வடகொரி யாவும் உச்சநிலை சந்திப்புக்கு ஆயத்தமாகி வருகின்றன. அதிபர் மூன் ஜே இன், வட கொரியத் தலைவர் கிம் ஆகிய இருவரும் முதல் முறையாக இம் மாதம் 27ஆம் தேதி நேரடியாக சந்தித்துப் பேசவிருக்கின்றனர்.
அமெரிக்கா வந்துள்ள ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயை அதிபர் டிரம்ப் இப்படி உரிமையுடன் பாராட்டுகிறார். இதற்கிடையே வடகொரியத் தலைவர் கிம்மை அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் சந்தித்துள்ளதை அதிபர் டிரம்ப் உறுதி செய்துள்ளார். படம்: ஏஎஃப்பி

