தேசிய முன்னணி கொடியை கிழித்த பெண்கள் கைது

1 mins read

கோலாலம்பூர்: தேசிய முன்ன ணியின் கொடியைக் கிழித்த தாகக் கூறப்படும் விவகாரத்தில் மூன்று பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தாமான் துன் டாக்டர் இஸ் மாயிலில் 31 வயது இரண்டு பெண்களும் 37 வயது பெண் ணும் செவ்வாய் இரவு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். குடியிருப்புப் பேட்டையில் தேசிய முன்னணி கொடியை மூவரும் கத்திரிக்கோலால் வெட் டியதாகக் கூறப்படுகிறது. கொடி கிழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டதை கோலா லம்பூர் காவல்துறை ஆணை யாளர் மஸ்லான் லஸிமும் உறுதி செய்துள்ளார். "சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்," என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே ஜின்ஜாங் மத்திய தடுப்புக்காவல் நிலையத் தில் மூன்று சந்தேக நபர்களும் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.