பாஸ் கட்சித் தலைவருக்கு அரசியல் அனுபவம் போதாது என்கிறார் மகாதீர்

பாஸ் கட்சித் தலைவருக்கு அரசியல் அனுபவம் போதாது என்கிறார் மகாதீர்

fallback

19 Apr 2018 - 6:00 am

1 mins read

பெட்டாலிங் ஜெயா: பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பதிலாக மருந்தகத்தில் மீண்டும் மருத்துவராகலாம் என்று முன் னாள் பிரதமர் டாக்டர் மகாதீருக்கு பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆலோசனை வழங் கியிருந்தார். இதற்குப் பதிலடி தந்துள்ள டாக்டர் மகாதீர், கிராமத்துக்குச் சென்று கற்றுக்கொடுங்கள் என்று கூறியுள்ளார். அரசியல் அனுபவமே இல்லாத அப்துல் ஹாடிக்கு அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கும் தகுதி யில்லை என்றும் டாக்டர் மகாதீர் சொன்னார். "அரசியலோ நிர்வாகமோ பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. அவரது தலைமையில் திரங்கானுக்கு நேர்ந்துள்ள கதியைப் பாருங்கள்," என்று 1999 முதல் 2004 வரை ஒரே தவணைக் காலத்திற்கு அப்துல் ஹாடி முதல்வராகப் பதவி வகித்ததை மகாதீர் சுட்டிக்காட்டினார்.

"அப்துல் ஹாடி இன்னும் மேலே படிக்க வேண்டும் என்று கருதுகிறேன். அப்போதுதான் இஸ்லாமியத்தை அவர் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். அதன் பிறகு அவர் இங்கு திரும்பி வர லாம். அவர் மிகவும் புத்திசாலியாக இருந்தால் இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றலாம்," என்றார் அவர். சில நாட்களுக்கு முன்பு பேசிய பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி, பொதுத் தேர்தலில் போட்டி யிடுவதற்குப் பதிலாக 93 வய தாகும் மகாதீர், அரசாங்க மருத்து வராகப் பணியாற்றலாம் என்று கூறியிருந்தார். இதையடுத்து டாக் டர் மகாதீரின் கடுமையான விமர் சனம் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை லங்காவி தொகுதியில் போட்டியிடப் போவ தாக மகாதீர் அறிவித்திருந்தார்.