தோக்கியோ: ஜப்பானில் உள்ள யாமா எரிமலை நேற்று வெடித்துக் குமுறியதால் அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்திருந்தது. வெடித்துச் சிதறிய பாறைக் கற்களும் அப்பகுதியில் நிறைந்திருந்தன. அந்த எரிமலை வெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. மற்ற சேத விவரங்கள் தெரியவில்லை. அந்த எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து சிதறக்கூடிய ஆபத்து உள்ளது என்று எரிமலை ஆய்வு பற்றிய நிபுணர்கள் கடந்த சில நாட்களாகவே எச்சரித்து வந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த எரிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். கடந்த ஜனவரி மாதம் ஜப்பானின் மற்றொரு எரிமலை வெடித்து சிதறியதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர்.
யாமா எரிமலை வெடித்து குமுறுவதைக் காட்டும் வீடியோ படம். படம்: ராய்ட்டர்ஸ்

