வாஷிங்டன்: வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடன் நேருக்கு நேர் தனியாக பேச்சு நடத்த அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் விரும்புவதாக தென்கொரிய செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டு இருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் உடனிருக்க வடகொரிய தலைவரு டன் பேசலாம் என்று டிரம்ப் நம்பு வதாக, பெயர் குறிப்பிடாத தென் கொரிய அரசதந்திரிகள் பலரை மேற்கோள் காட்டி சூசுன் இல்போ என்ற செய்தித்தாள் தெரிவித்து இருக்கிறது. என்றாலும் இதன் தொடர்பில் வெள்ளை மாளிகை உடனடியாக கருத்து எதையும் கூறவில்லை. பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் அதிகாரிகளின் எண்ணிக்கை கூடுமானவரை குறைவாக இருந்தால் மட்டுமே குறிப்பிடத்தக்க பலன்களைக் காண முடியும் என்று அமெரிக்க அதிபர் நம்புவதாக அரசதந்திரி ஒருவரை மேற்கோள் காட்டி அச் செய்தித்தாள் குறிப்பிட்டது.
இதனிடையே, வடகொரிய தலைவருடன் தான் நடத்தவிருக் கும் உச்சநிலை சந்திப்பு பயனுள்ள தாக இருக்கும் என்று தான் கருதாத பட்சத்தில் தன்னுடைய திட்டங்களைத் தான் கைவிட்டு விடப் போவதாகவும் அல்லது உச்சநிலை கூட்டத்திலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் இதுவே தன் திட்டம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பானிய பிரதமருடன் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார். "நான் முன்பு கூறியதை போல, அணுசக்தி பயன்பாட்டை வட கொரியா முழுமையாக நீக்கி விட்டால், அது அந்நாட்டிற்கு மட்டும் அல்லாமல் இந்த உலகத்திற்கும் சிறந்த நாளாக அமையும்" என்று டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபரும் திரு கிம் ஜோங் உன்னும் வரும் ஜூன் மாதம் அல்லது அதற்கு முன்னதாக சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த சந்திப்பு எந்த இடத்தில் நடைபெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று தென்கொரியா கூறுகிறது. வடகொரியாவுக்கும் அமெரிக் காவுக்கும் இடையில் அரசதந்திர உறவுகள் இல்லை. ஆகையால் பதவியில் இருக்கும்போது அமெ ரிக்க அதிபர் யாரும் வடகொரிய தலைவர் யாரையும் இதுவரையில் சந்தித்ததில்லை.
வடகொரியா பல ஆண்டுகளாக மனித உரிமை மீறல் நடவடிக்கை களில் ஈடுபட்டு வந்தது. மேலும் அணு ஆயுதங்கள் தயாரிப்பு, அனைத்துலக சட்டங்கள் மற்றும் ஐநா தடைகளை மீறுவது ஆகிய வற்றுக்காக அந்நாடு தனித்து விடப்பட்டது. தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது பிற நாடுகளுடனான நல்லுறவுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக அமைந்திருந்தது. அமெரிக்க-வடகொரிய உறவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

