மலேசியா: ஆரம்ப வேட்பாளர் பட்டியலை கைவிட்டது தேசிய முன்னணி

மலேசியா: ஆரம்ப வேட்பாளர் பட்டியலை கைவிட்டது தேசிய முன்னணி

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய நாடாளு மன்றம் கலைக்கப்பட்ட ஒரு சில நாட்களில் தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியலை வெளியிட மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் திட்டமிட்டிருந்தார். ஆனால் கட்சிக்குள்ளேயே சதி வேலை நடக்கக்கூடிய ஆபத்தை தவிர்ப்பதற்காக ஆரம்ப வேட்பாளர் பட்டியல் கைவிடப்பட்டதாக கூறப் படுகிறது.

மலேசிய நாடாளுமன்றம் இம்மாதம் 6ஆம் தேதி கலைக் கப்பட்டது. அதற்கு மறுநாள் தேர்தல் அறிக்கையை வெளி யிட்டது தேசிய முன்னணி. தேர்தல் அறிக்கை வெளி யிடப்பட்ட ஓரிரு நாட்களில் தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியலை திரு நஜிப் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆளும் தேசிய முன்னணிக் கூட்டணி அதன் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. கடந்த பத்து நாட்களாகவே திரு நஜிப், தேசிய முன்னணித் தலைவர்களுடன் குறிப்பாக அம்னோ தலைர்களுடன் வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

வேட்பாளர் பட்டியலில் சிலரின் பெயர் இடம் பெறாமல் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் ஒற்றுமையுடனும் விசுவாசத்துட னும் செயல்பட வேண்டும் என்று திரு நஜிப் சில நாட்களுக்கு முன்பு கேட்டுக்கொண்டிருந்தார்.