பெண்கள் நலனில் அக்கறை காட்ட மோடிக்கு அனைத்துலக பண நிதியத் தலைவர் வலியுறுத்து

பெண்கள் நலனில் அக்கறை காட்ட மோடிக்கு அனைத்துலக பண நிதியத் தலைவர் வலியுறுத்து

2 mins read
957077e2-6ab9-4b2b-8b6f-5d66960f28bb
-

இந்தியப் பெண்கள் நலனில் அக்கறை செலுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடியை அனைத்துலகப் பண நிதியத்தின் (ஐஎம்எஃப்) கிறிஸ்டின் லகார்ட் வலியுறுத்தியுள்ளார். காஷ்மீர் மாநிலம், கத்துவாவில் எட்டு வயதுச் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவம் அருவருக்கத்தக்க செயல் என்று வா‌ஷிங்டனில் திருவாட்டி லகார்ட் குறிப்பிட்டார். "இந்தியாவில் நடந்திருப்பது மிகவும் அருவருக்கத்தக்க ஒன்று. பிரதமர் மோடி தொடங்கி இந்திய அதிகாரிகள் அனைவரும் பெண்கள் நலனில் அக்கறை செலுத்துவர் என்று நம்பு கிறேன்.

ஏனெனில், இந்தியப் பெண் களின் இப்போதைய தேவை பாதுகாப்பு ஒன்றுதான்," என்றார் திருவாட்டி லகார்ட். இப்படி பிரதமர் மோடியை அவர் வலியுறுத்தி இருப்பது இது முதல்முறை அல்ல. கடந்த ஜனவரியில் டாவோசில் நடந்த உலகப் பொருளியல் கருத்தரங் கின்போது இந்தியப் பெண்கள் பற்றி அவர் மோடியிடம் பேசியுள்ளார். "டாவோசில் பிரதமர் மோடி உரை ஆற்றிய பிறகு, இந்தியப் பெண்கள் குறித்து போதுமான அளவு பேசவில்லை என்று அவரிடம் சொன்னேன்.

ஆனாலும் அவர்களைப் பற்றி பேசுவதோடு நின்றுவிடக்கூடாது," என்று அவர் சொன்னார். அதே நேரத்தில் இது தமது தனிப் பட்ட கருத்து என்றும் ஐஎம்எஃப் தலைவராகத் தாம் இதைச் சொல்ல வில்லை என்றும் அவர் தெளிவுபடுத் தினார். காமன்வெல்த் நாடுகளின் தலைவர் கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்ற மோடி, அங்கு நேற்று முன்தினம் உரையாற்றியபோது இந்தி யாவில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது என்றும் அவற்றை அரசியலாக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தியப் பெண்களின் பாதுகாப்பு அதிக அக்கறைக்குரிய விஷயம் என்ற மோடி, பெற்றோர்கள் தாமதமாக வீடு திரும்பும் மகள்களிடம் மட்டும் கேள்வி எழுப்புவது ஏன் என்றும் அதையே தங் கள் மகன்களிடமும் கேட்காதது ஏன் என்றும் புதுடெல்லியில் முன்னர் தான் பேசியிருந்ததையும் குறிப்பிட்டார்.