காணாமற்போன 3 வயது சிறுமியை பாதுகாப்பாக வைத்திருந்த நாய்

காணாமற்போன 3 வயது சிறுமியை பாதுகாப்பாக வைத்திருந்த நாய்

1 mins read

சிட்னி: வீட்டிலிருந்து காணாமற்போன 3 வயது சிறுமிக்கு ஒரு நாள் இரவு முழுவதும் பாதுகாப்பாக இருந்திருக்கிறது ஒரு நாய். ஆஸ்திரேலிய புதர்நிலப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தபோது கிட்டத்தட்ட 15 மணி நேரம் அந்தச் சிறுமிக்கு பாதுகாப்பாக இருந்திருக்கிறது அந்த நாய். இத்தனைக்கும் அந்த நாய்க்கு காது கேட்காதாம். ஒரு கண்ணால் மட்டுமே அதனால் பார்க்க முடியுமாம்.

வீட்டைவிட்டு எப்படியோ வெளியேறி ஆஸ்திரேலியா புதர்நிலப் பகுதியில் சிக்கிக்கொண்ட அயுரோரா என்ற அந்தச் சிறுமியைக் கண்டுபிடிக்க அவசர சேவைக் குழுவினர் வெள்ளிக்கிழமை தரைவழி மற்றும் வான் வழி தேடல்களைத் தீவிரப்படுத்தினர். அப்போது சிறுமியின் குரலைக் கேட்ட சிறுமியின் பாட்டி முதலில் மேக்ஸ் எனும் 17 வயது நாயை பார்த்திருக்கிறார். அந்த நாய் நேற்று காலை அந்தப் பாட்டியையும் மீட்புக் குழுவினரையும் சிறுமி இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது. சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுமிக்கு பாதுகாப்பாக இருந்த அந்த நாய்க்கு போலிசார் விருது வழங்கி கெளரவித்தனர்.