ஆபத்தான படகுப் பயணத்தை தொடரும் ரோஹிங்யா மக்கள்

ஆபத்தான படகுப் பயணத்தை தொடரும் ரோஹிங்யா மக்கள்

1 mins read
c634a21a-fc39-45c9-a997-a9bb7d080a8d
-

மியன்மாரிலிருந்து வெளியேறும் ரோஹிங்யா மக்கள் படகுப் பயணம் ஆபத்தானது என்று தெரிந்திருந்தும் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் அப்பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். படகுப் பயணத்தின்போது கொந்தளிப்பு மிக்க அடல் அலைகளில் சிக்கி படகுகள் மூழ்க நேரிடுகிறது. இதனால் படகுப் பயணிகள் பலர் உயிரிழக்கின்றனர். கடலில் தத்தளித்த சிலரை மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்ந்திருக்கின் றனர்.

இந்த வரிசையில் ரோஹிங்யா அகதிகள் 76 பேரை ஏற்றிவந்த ஒரு படகு வெள்ளிக்கிழமை இந் தோனீசியாவின் வடமேற்கு கடலோரப் பகுதியில் காணப் பட்டதைத் தொடர்ந்து அப்படகில் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட அனைவரும் அச்சே மாநிலத்தில் உள்ள தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமில் தங்கியுள்ள அவர்கள் காலை உணவு வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்