ஆளும் அம்னோ கட்சி அதன் விதிமுறைகளை மீறியிருப்பதாக கூறப்படுவதால் அக்கட்சி கலைக் கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த 16 உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றியது அம்னோ. அந்த உறுப்பினர்களின் நடவடிக்கை அம்னோ கட்சியின் விதிமுறைகளை மீறியிருப்பதை தெளிவாக உணர்த்துகிறது என் றும் கட்சி விவகாரங்களை நீதி மன்றத்திற்கு கொண்டுசெல்லும் எந்த ஒரு உறுப்பினரும் தானாகவே கட்சி உறுப்பினர் தகுதியை இழப்பர் என்றும் அம்னோ கட்சியின் தலைமைச் செயலாளர் துங்கு அட்னான் துங்கு மன்சூர் கூறினார்.
கட்சிக்கு நம்பிக்கை துரோகம் செய்ய விரும்பும் அந்த 16 உறுப்பினர்கள் கட்சியில் இல்லாமல் இருப்பதே நல்லது என்றும் அவர் கூறினார். அம்னோ கட்சியிலிருந்து அந்த 16 பேரும் வெளியேற்றப் பட்டிருப்பது குறித்து தங்கள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அந்த உறுப் பினர்களுக்கு அது பற்றிய கடிதம் உடனடியாக அனுப்பவிருப்ப தாகவும் துங்கு அட்னான் கூறினார். 14வது பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அம்னோ கட்சி உறுப்பினர்கள் 16 பேர், அம்னோ கட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளனர்.
அம்னோ கட்சி இரண்டு முறை கட்சித் தேர்தலைத் தள்ளிவைத்த தாகவும் கட்சித் தேர்தலை நடத்தாத அம்னோ கட்சி சட்டபூர்வமான கட்சிதானா என்ற கேள்வியையும் அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையில் அம்னோ கட்சித் தேர்தலை தள்ளிப்போடுவதற்கு மன்றங்கள் பதிவகத்தின் பதிவாளர் எடுத் துள்ள முடிவை மறுஆய்வு செய்யக் கோரியும் அந்த 16 உறுப்பினர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

