ஹமாஸின் அல்-பாட்ஸ் கொலை பற்றிய விசாரணை கவனமாகக் கையாளப்படும்

ஹமாஸின் அல்-பாட்ஸ் கொலை பற்றிய விசாரணை கவனமாகக் கையாளப்படும்

2 mins read

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஹமாஸ் இயக்கத்­தைச் சேர்ந்த பேராசிரியர் முகம்மது அல்=பாட்ஸ் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உடல் நேற்று பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. இந்தக் கொலை தொடர்பான விசாரணையை மலேசியா மிகவும் கவனமாகவும் ஆழமாகவும் கையா­ளும் என்று மலேசிய போலிஸ் துறை தலைவர் மஸ்லான் லஸிம் தெரிவித்தார். பிரேதப் பரிசோத­னைக்குப் பின்னர் அல்=பாட்ஸின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பாலஸ்தீன விஞ்ஞானியும் ஹமாஸ் இயக்கத்தின் உறுப்பினரு­மான பேராசிரியர் அல்=பாட்ஸ் என்ற 35 வயது விஞ்ஞானி, தனது அடுக்குமாடி வீட்டில் இருந்து அருகேயுள்ள பள்ளி வாசலுக்கு தொழுகையில் கலந்து­கொள்ளச் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போகிற போக்கில் அவரைச் சுட்டுக் கொன்றதாக மலேசிய போலிஸ் தெரிவித்தது. கோம்பாக்கின் புறநகர்ப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில் மாண்ட முகம்மது அல்=பாட்ஸ் மீது கொலையாளிகள் 14 முறை சுட்ட தாகவும் அவற்றில் சில குண்டுகள் அருகேயுள்ள சுவரிலும் இரும்புக் கம்பித் தடுப்பிலும் பட்டு சேதம் விளைவித்ததாகவும் போலிஸ் தெரிவித்­தது. பேராசிரியர் பாட்ஸ் ஒரு மின்சாரப் பொறியாளர் என்றும் அவர் ஏவுகணை தயாரிப்பதில் வல்ல­வர் என்றும் மலேசிய உள்துறை அமைச்சர் அஹ்மது ஸாகித் ஹமிடி அந் நாட்டின் செய்தி நிறுவனமான பெர்னாமா­விடம் தெரிவித்தார்.

இந்தக் கொலை குறித்துக் கருத்துக் கூறிய மலேசிய போலிஸ் தலைவர் மஸ்லான், "இந்தக் கொலையை ஒரு அனைத்துலகப் பிரச்சினையாகக் கருத்தில் கொண்டு எல்லாக் கோணங்­களிலும் விசாரணை மேற்கொள்ளப் படும்," என்று தெரிவித்தார். இது குறித்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் "பேராசி­ரியர் அல்=பாட்ஸ் அணுசக்­தித் துறையைச் சேர்ந்த ஆய்வு விஞ்­ஞானி. அவர் எங்கள் இயக்கத்தில் ஓர் உறுப்பினர். அவர் கொல்லப் பட்டதற்கு இஸ்ரேல் உளவுத் துறையே காரணம் என்று சாடியுள்­ளது. மலேசியாவில் வசித்து வந்த பேராசிரியர் அல்=பாட்ஸின் மாண­வரும் உறவினருமான 17 வயது முகமது ‌ஷிடாட் என்பவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "அல்=பாட்ஸ் ஓர் அறிவாளி. அறிவாளிகளை எப்­போதுமே இஸ்ரேல் அச்­சுறுத்­ ­த­லாகத்தான் பார்க்கும்," என்று கூறினார். அத்துடன் ஏவுகணை தயாரிப்பதில் அல்=பாட்ஸ் மிகவும் வல்லவர். எனவேதான் அவரை இஸ்ரேல் மிகவும் ஆபத்தான வராகக் கருதியது என்றார்.

கொல்லப்பட்ட அல்=பாட்ஸுக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். அவர் கடந்த பத்தாண்டுகளாக மலேசியாவில் வசித்து வருகிறார். அவரைப் பற்றி கருத்துக் கூறிய இன்னொரு வெளிநாட்டு மாணவர், "அல்=பாட்ஸ் மிகவும் நட்பார்ந்த முறையில் பழகுவார். நல்லவற் றையே போதிப்பார். அவர் ஒரு போதும் வெறுக்கத்தக்கவற்றைப் போதித்ததில்லை. அவர் கொல்லப் பட்ட செய்தியறிந்து அதிர்ச்சிய டைந்த­தாகக் கூறினார். இந்நிலையில் அல்=பாட்ஸின் கொலைக்கு இஸ்ரேலின் உளவுத் துறைதான் காரணம் என்று ஹமாஸ் கூறியுள்ளதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.