ஆப்கானிஸ்தான் தேர்தல் மையத்தில் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தான் தேர்தல் மையத்தில் குண்டு வெடிப்பு

1 mins read
d5b9eaaf-78cb-4a85-83b1-ba10039ac922
-

காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தேர்தல் மையம் ஒன்றில் குண்டுவெடித்து குறைந்தது 57 பேர் மாண்டதாகக் கூறப்படுகிறது. இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்று அதி காரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலுக்கு இது­வரையிலும் எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. நீண்ட காலமாக ஒத்திப் போடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடத்தப்படவுள்ளது. அதற்கு ஆயத்தமாக ஆப்கானிஸ்தான் முழுதும் தேர்தல் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நேற்று நடந்த தாக்குதல் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள டாஸ்ட்=இ பர்ச்சி என்ற இடத்தில் நடந்தது. அந்தப் பகுதியில் ‌ஷிட் ஹஸாரா என்னும் சிறுபான்மையினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி தொடர்ச்­சியாக ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்கு தலுக்கு உள்ளாகி வருவதாகக் கூறப்படுகிறது.

காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள டாஸ்ட்-இ சர்ச்சி என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து ஆதாரம் தேடுகிறார் இந்த ராணுவ அதிகாரி. படம்: ஏஎஃப்பி