பொருளியல் வளர்ச்சிக்கு வழிதேடும் வடகொரியா

பொருளியல் வளர்ச்சிக்கு வழிதேடும் வடகொரியா

2 mins read

சோல்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அணுவாயுதச் சோதனைகளைக் கைவிடுவதன் பின்னணியில் வேறு நோக்கம் உள்ளது. அவர் தனது ஆளும் கட்சிக் கூட்டம் ஒன்றில் கடந்த வெள்ளிக் கிழமை கலந்துகொண்டு உரையாற்றியபோது, நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு உகந்த அனைத்துலக சூழலை உருவாக்கி பொருளியலில் உயர் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல தான் உறுதி பூண்டுள்ளதாகக் கூறினார்.

இதை 2012ஆம் ஆண்டு வட கொரியர்கள் சிக்கன வாழ்க்கையை இனி மேற்கொள்ள வேண்டியிருக்காது என்ற அவரின் உரையின் தொடர்ச்சி யாக அனைத்துலகப் பார்வையாளர்கள் கருதுவதாக புளும்பெர்க் செய்தி தகவல் கூறுகிறது. அத்துடன், கிம் ஜோங் உன் தனது நாட்டின் பொருளி யல் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வடகொரியா ஒவ்வொரு முறையும் அணுவாயுதச் சோதனை நடத்தும்போது அதற்கு எதிராக விதிக்கப்படும் வர்த்தக, நிதி, எரிசக்தித் தடைகள் ஆகியன நீக்கப்படுவதையும் அவர் எதிர் பார்க்கிறார் என்று அந்த செய்தித் தகவல் கூறுகிறது.

தென்கொரியாவைப் பின்பற்றி வடகொரியாவும் அபாரமான பொருளியல் வளர்ச்சி காணக்கூடும் என்று பலர் நம்பத் தயாராக இல்லை. ஏனெனில், முதலீடு செய்துவிட்டு பின்னர் அந்த முதலீட்டுக்கு அபாயம் ஏற்படும் பட்சத்தில் வடகொரியாவில் எவ்வித இழப்பீட்டுக்கும் வழியில்லை என்பது வரலாறு. இருப்பினும், முதலீடு வாய்ப்புள்ள சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற பெரு வளர்ச்சி கண்டுவரும் பொரு ளியல் வட்டாரத்தில், வடகொரியா இருப்பதைப் பார்வையாளர்கள் கருத் திற்கொண்டுள்ளனர் என்று புளும் பெர்க் செய்தித் தகவல் விளக்குகிறது.

"வடகொரியா குறித்து எதுவா யிருந்தாலும் வளர்ச்சி சாத்தியத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கப் படுகிறது," என்று அந்நாட்டிலிருந்து தென்கொரியாவுக்கு தப்பியோடி வந்தவரும் தற்பொழுது கொரிய வளர்ச்சி வங்கியில் பணிபுரிபவருமான கிம் யங் ஹுவி கூறுகிறார். இதற்கிடையே, ஈரானின் அணுவாயுத ஒப்பந்தத்தை மாற்றக் கோரும் அமெரிக்காவின் போக்கு அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என்ற அபாயகரமான சமிக்ஞையை அது மற்ற நாடுகளுக்கு விடுப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளளதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.