பக்கத்தான்: தேர்தல் தொகுதி எல்லைக்கோடுகளை மாற்றியமைப்போம்

1 mins read

செராஸ் (மலேசியா): மலேசியாவின் எதிர்க்கட்சியான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி, இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் எல்லைக்கோடுகளை மீண்டும் வடிவமைக்கும். இதனை அக்கூட்டணியின் ஜனநாயகச் செயல் கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். "இதன் மூலம் ஒரு வாக்காளர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்ற கொள்கையை உறுதிப்படுத்துவோம்," என்றார் அவர். சிலாங்கூரின் வேட்பாளர்களை அறிவிக்கும்போது உரைநிகழ்த்திய அவர் இதனைத் தெரிவித்தார். "பங்கி தொகுதிக்கான நாடாளுமன்ற இடத்தைத் தேர்வு செய்ய பதிவுபெற்ற வாக்காளர்கள் 178,000 பேர் உள்ளனர். இதுவே நாட்டின் மிகப்பெரிய தொகுதியாக உள்ளது. இத்தொகுதி வேட்பாளர் டாக்டர் ஓங் கியான் மிங் இங்குள்ள 178,000 பேருக்கு சேவையாற்ற வேண்டும். அவருக்கு எனது வாழ்த்துகள்," என்றார்.