கனடாவில் பயங்கரம்: பாதசாரிகள் மீது வாகனத்தை மோதி 10 பேரைக் கொன்றார்

கனடாவில் பயங்கரம்: பாதசாரிகள் மீது வாகனத்தை மோதி 10 பேரைக் கொன்றார்

2 mins read
35133557-4a61-4d61-a4f2-b6dda486da2e
-

கனடாவின் டொராண்டோவில் வாடகைக்கு வேன் எடுத்துக் கொண்டு அதை ஓட்டி வந்த ஒருவர், பாதசாரிகள் மீது வாகனத்தை ஓட்டி 10 பேரைக் கொன்றுவிட்டார். அந்தச் சம்பவத்தில் 16 பேர் காயம் அடைந்துவிட்டனர். மதியம் சாப்பாட்டு நேரத்தில் வழக்கம்போல சாலை ஓரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது அந்த ஆடவர் தன் வாகனத்தை மோதிக் கொண்டே சுமார் 1 மைல் தூரம் வேகமாகச் சென்றதாக போலிஸ் தெரிவித்தது.

அலெக் மினாசியன், 25, என்று அந்தச் சந்தேகப்பேர்வழி அடையாளம் காணப்பட்டார். இவருக்கும் திட்டமிட்டு குற்றச் செயல்களை அரங்கேற்றும் தீவிர வாதக் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று போலிஸ் கூறியது.

இருந்தாலும் இந்தச் சம்பவம் வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு காரியம் என்றது போலிஸ். ஜி7 அமைச்சர்கள் கூட்டம் நடந்துகொண்டிருந்த இடத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் பட்டப்பகலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

ஆயினும் அந்தக் கூட்டத் திற்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர். இந்தப் பயங்கர சம்பவம் தொடர்பில் கைதாகி இருக்கும் அலெக் மினாசியன், வடக்கு டொராண்டோ புறநகர் பகுதி யைச் சேர்ந்தவர். இந்த விவகாரம் பற்றி உள் ளூர், மாநில, மத்திய புலன் விசாரணை அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகிறார்கள். மாண்டவர்களில் இரண்டு பேர் தென்கொரியர்கள் என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சு பேச்சாளர் கூறினார்.

"எல்லாமே வேகமாக நிகழ்ந்து விட்டன. ஒருவர் பின் ஒருவராக இடித்துத் தள்ளப்பட்டதை நான் பார்த்தேன். வீதிகளில் பலரும் தரையில் விழுந்துகிடந்தார்கள்," என்று சம்பவத்தை நேரில் பார்த்த அலெக்ஸ் ஷாகர் என்பவர் தெரி வித்ததாக சிடிவி தொலைக் காட்சி குறிப்பிட்டது. "வேன் எல்லாவற்றையும் இடித் துத் தள்ளியது. ஒரு மேசையையும் அது நொறுக்கியது. வீதியில் யார் இருந்தாலும் அவர் மீது அது மோதியிருக்கும்," என்று வேறொரு வர் கூறினார். இந்தச் சம்பவம் டொராண்டோ நகர மக்களை அச் சத்தில் தள்ளியுள்ளது.

கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ஃபின்ச் அவென்யூ வில் இருக்கும் யோங்கே ஸ்திரீட்டில் பாதசாரிகள் மீது ஒருவர் வேனை ஓட்டி 10 பேரைக் கொன்றுவிட்டார். இந்தச் சம்பவத்தை எண்ணிப்பார்க்க முடியாத ஒரு தாக்குதல் என்று கனடாவின் பிரதமர் கண்டித்தார். படம்: ஏஎஃப்பி