பாலஸ்தீன விஞ்ஞானி கொலை: 'வேறு நாட்டின் கடவுச்சீட்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்'

1 mins read

கூச்சிங்: வெளிநாட்டு முகவர்கள் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள் வதற்காக மலேசியாவுடன் நட்பு உறவுள்ள நாடுகளின் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி நாட்டுக்குள் புகுந்துள்ளதாக மலேசிய துணைப் பிரதமர் அஹமத் ஸாஹித் ஹமிதி தெரிவித்துள்ளார். மத்திய ஆசிய நாடு ஒன்றின் முகவர்களும் இவ்வாறு செய்திருக்கலாம் என்று அவர் கூறியதாக மலேசிய ஊடகம் செய்தி வெளி யிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கட்டமைப்புகளைக் கொண்டு அந்த நாட்டின் முகவர் கள் தங்களின் ரகசிய பணிகளை மேற்கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கோலாலம்பூரில் கடந்த சனிக் கிழமை பாலஸ்தீன விஞ்ஞானி கொலை செய்யப்பட்டதையடுத்து இவ்வாறு அவர் கூறினார்.

சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கில் அவர் பேசினார். அரசாங்கம் தொடர்ந்து வெளி நாட்டு முகவர்களைக் கண்கா ணித்து வருவதாகவும் ஆனால் வேறு நாட்டு கடவுச்சீட்டு பயன் படுத்தப்பட்டிருந்தால் அவர்களை அடையாளம் காண்பது சிரமம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் அவிக்டோர் லிபர்மன் தனது நாடு இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்று கூறியுள்ளார். எகிப்து அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மாண்டவரின் உடலை காஸாவிற்கு எடுத்துவருவதை அவர் தடுக்கும்படி கூறியுள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத் திற்கும் இடையில் பதற்றம் அதிக ரித்த நிலையில் கடந்த நான்கு வாரங்களில் 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.