சீனா=தைவான் உறவில் விரிசல்; போர் பாவனை பயிற்சியில் மும்முரம்

1 mins read

பெய்ஜிங்: தைவானுக்கும் சீனா வுக்கும் இடையில் அண்மை ஆண்டுகளாக உறவு விரிசல் அடைந்துவரும் நிலையில் இரு நாடுகளும் தங்களின் தற்காப்பை வலுப்படுத்தி வருகின்றன. நாட்டுக்குள் வெளிநாட்டு ராணுவம் புகுந்தால் எவ்வாறு போரிடுவது என்பது குறித்து அடுத்த வாரம் முதல் தைவான் பாவனைப் பயிற்சி செய்ய உள்ளது. அதோடு, கிழக்கு சீனக் கடலில் பாவனைப் பயிற்சியைச் செய்ய விமானத்தை ஏற்றும் கப்பல் ஈடுபட்டுள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது. அக்கடல் பகுதியின் உரிமை குறித்து அண்டை நாடுகளுடன் சீனா சர்ச்சையில் உள்ளது.