இந்தோனீசிய முன்னாள் நாடாளுமன்ற நாயகருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை

இந்தோனீசிய முன்னாள் நாடாளுமன்ற நாயகருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை

1 mins read
92bda015-bb2b-411c-9c3b-dcf247686626
-

ஜக்கர்த்தா: தேசிய மின்னியல் அடையாள அட்டைத் திட்டத்தில் ஊழல் செய்ததன் தொடர்பில் நாட்டிற்கு சுமார் 170 மில்லியன் அமெரிக்க டாலர் ($225மி.) இழப்பை ஏற்படுத்திய குற்றத் திற்காக இந்தோனீசிய முன்னாள் நாடாளுமன்ற நாயகர் செத்யா நொவான்டோவிற்கு (படம்) அந்நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டு கள் சிறைத் தண்டனை விதித்து உள்ளது. அந்நாட்டில் ஊழல் விரிசலாடு வதை வழமையாக ஏற்றுள்ள மக்களுக்கு இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரும் ஊழல்களையும் தங் களின் நாடாளுமன்றம் செயல் இழந்த ஒன்று என்றும் மக்கள் ஏற்றுள்ள நிலையில் இம்முறை அரசியல் தொடர்புடைய ஒருவருக்குத் தண்டனை விதிக் கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைத் தண்டனையோடு 500 மில்லியன் ரூப்பியா ($47,600) அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டுள்ளது. அவர் தண்டனைக் காலத்தை முடித்தபின்னர் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளது. அவர் ஊழல் செய்த $9.65 மில்லியன் ரொக்கத்தையும் திருப்பித் தருமாறு நீதிபதி யான்டோ கட்டளையிட்டார். தண்டனை விதிக்கப்பட்ட போது நொவான்டோ எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

1990களிலிருந்து ஐந்து ஊழல் தொடர்பான வழக்குகளில் சம்பந் தப்பட்ட நொவான்டோவிற்கு இதுவரை தண்டனை விதிக்கப் பட்டதில்லை.