வாஷிங்டன்: அதிபராகப் பதவி ஏற்று ஓராண்டுக்கும் மேல் ஆகிய நிலையில் அமெரிக்க அதிபர் முதன்முறையாக பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரானுக்கு அதிகாரபூர்வ விருந்தளித்தார். மூன்று நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள பிரெஞ்சு அதிபர் இரண்டு நாட்கள் முக்கிய விவகாரங்கள் குறித்து டிரம்ப்பு டன் பேச்சுவார்த்தை நடத்துவார். ஈரான் அணுவாயுத உடன்பாடு குறித்து முக்கியமாகப் பேசப்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். 2015ஆம் ஆண்டு ஈரான் அணுவாயுத உடன்பாட்டை மீண்டும் நீட்டிக்க சம்மதம் தெரி விக்காததால் ஐரோப்பிய நாடுகள் பதற்றமடைந்துள்ளன.
அந்த உடன்பாட்டில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை கையெழுத் திட்டுள்ளன. அந்த ஆதரவு நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் ஆதரவை நாடியுள்ளன. டிரம்ப் அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டுமென போராடிவருகின் றனர். இதற்கிடையில், டிரம்ப்பிடம் மீட்புப் பணம் கொடுக்கவேண்டாம் என்று ஈரானின் உயர் அதிகாரி ஐரோப்பியத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். ஒப்பந்தத்தைக் காப்பதற்கு அந்நாடுகள் எடுக்கும் முயற்சியை அவர் வரவேற்றார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் (இடமிருந்து இரண்டாவது) பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரானும் (வலக்கோடி) அவர்களது துணைவியாருடன் நடந்துவருகின்றனர். படம்: ஏஎஃப்பி

