அன்வார் தலையிட்டார்; பினாங்கில் மகள் போட்டி

அன்வார் தலையிட்டார்; பினாங்கில் மகள் போட்டி

2 mins read

கோலாலம்பூர்: மலேசிய எதிர்க் கட்சியான பிகேஆர் கடந்த சில தினங்களாக பதற்றநிலையில் மூழ்கியிருந்தது. அதன் தலைமை அதிகாரிகளுக்குள் எழுந்த பிரச் சினைகளையடுத்து அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் தலையிட்டு நிலைமையை சரிப் படுத்தியுள்ளார். சிறையில் உள்ள அன்வார் தற்போது மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். அன்வார் வரும் ஜூன் மாதம் விடுவிக்கப்படுவார் என்று நம்பப் படுகிறது. இதற்கிடையில், பதற்றநிலை சீர்படுத்தப்பட்டு எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி, அன்வாரின் தொகு தியான பினாங்கின் பெர்மாதாங் பாவு தொகுதியில் அவரது மகளும் கட்சியின் துணைத் தலைவருமான நூருல் இஸ்சா அன்வார் போட்டியிடவிருக்கிறார். முதன்முதலில் 1982ஆம் ஆண்டு அந்தத் தொகுதியில் அம்னோ கட்சித் தலைவராக இருந்தபோது அன்வார் அந்தத் தொகுதியைத் தன்வசப்படுத்தினார். அதன் பின்னர் அவரது மனைவி டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் அந்தத் தொகுதியில் போட்டியிட்டு கைப்பற்றினார்.

திருவாட்டி நூருல் இஸ்சா இரண்டு தவணைகள் கோலா லம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இம்முறை ஆளும் தேசிய முன்னணி நூற்றுக்கணக் கான சட்டவிரோத வாக்காளர் களை அத்தொகுதியில் இறக்கி உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கள் கூறிவருகின்றனர். அதனால் அங்கு எதிர்க்கட்சி வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. டாக்டர் வான் அஸிசா இந்த தேர்தலில் சிலாங்கூரின் பான்டான் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது நெருங்கிய ஆதரவா ளரும் கட்சியில் மற்றொரு துணைத் தலைவருமான ரஃபிஸி ரம்லி அந்தத் தொகுதியை வைத் திருந்தார்.

அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் எதிர்வரும் தேர்தலில் அவர் போட்டியிட தடைவிதிக்கப் பட்டுள்ளது. கட்சியின் இணைத் தலைவரும் சிலாங்கூர் முதலமைச்சருமான அஸ்மின் அலி அவரது கோம்பாக் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக்கொள்வார். மாநில சட்டமன்றத் தொகுதி யான புக்கிட் அன்டாராபங்சாவிலும் மீண்டும் அவர் போட்டியிடுகிறார். சிலாங்கூரில் போட்டியிடவிருக் கும் வேட்பாளர்கள் டாக்டர் வான் அஸிசாவால் நிராகரிக்கப்பட்டு உள்ளதையடுத்து அவருக்கும் அஸ்மினுக்கும் இடையில் அண்மைக்காலமாக விரிசல் உண்டாகியுள்ளது.