உள்ள ஒரு எண்ணெய்க் கிணற்றில் நேற்று திடீரென்று தீ மூண்டதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக வும் இன்னும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். சுமத்ரா தீவின் அச்சே மாநிலத்தில் உள்ள அந்த எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக அங்கு பெரும் தீ மூண்டதாகக் கூறப்படுகிறது. அந்ந எண்ணெய்க் கிணறு குடியிருப்புப் பகுதியில் உள்ளதால் தீயில் அப்பகுதியில் உள்ள மூன்று வீடுகள் முற்றாக சேதம் அடைந்ததாக குடியிருப்பாளர்கள் கூறினர்.
அந்த எண்ணெய்க் கிணறு சட்டவிரோதமாக தோண்டப் பட்ட கிணறு என்று கூறப்படுகிறது. அந்த எண்ணெய்க் கிணற்றில் தீ இன்னும் எரிந்துகொண்டிருப் பதாகவும் தீயணைப்பாளர்களால் தீயை அணைக்க முடியவில்லை என்றும் அச்சே மாநில உயர் அதிகாரி ஒருவர் கூறினார். தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதலில் அதிகாரி கள் அறிவித்தனர். இந்த எண் ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
அச்சே மாநிலத்தில் உள்ள ஒரு எண்ணெய்க் கிணற்றில் மூண்ட தீயை அணைக்க சிரமப்படும் தீயணைப்பாளர்கள். எண்ணெய்க் கசிவு காரணமாக அந்த கிணற்றில் தீ மூண்டதாகக் கூறப்படுகிறது. வானளவுக்கு கொழுந்துவிட்டு எரியும் தீயைக் கட்டுப்படுத்த சிரமமாக உள்ளது என்று தீயணைப்பாளர்கள் கூறுகின்றனர். இந்தோனீசியாவில் வேலையிட பாதுகாப்பு எப்போதுமே குறைவாக உள்ளது என்று இந்தோனீசிய மக்கள் கூறுகின்றனர். படம்: ஏஎஃப்பி

