தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் நாளை சந்தித்துப் பேசவுள்ள நிலையில் அந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று கொரிய தீபகற்ப மக்கள் விரும்புகின்றனர். அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஏராளமான பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரு கொரியாக்களின் எல்லைப் பகுதியில் ராணுவமயமற்ற பகுதியில் அவர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர். தென்கொரியாவின் கட்டுபாட்டில் உள்ள சர்ச்ச்சைக்குரிய தீவுகள் குறித்து அவர்கள் முக்கியமாக பேச்சு நடத்துவர் என்று தெரிகிறது. படம்: ராய்ட்டர்ஸ்
இரு கொரியாக்களின் தலைவர்கள் நாளை சந்திப்பு; மகிழ்ச்சியில் திளைக்கும் சிறுவர்கள்
1 mins read
-

