பாலஸ்தீன விரிவுரையாளர் படுகொலை: சந்தேக நபரின் புதிய புகைப்படம்

பாலஸ்தீன விரிவுரையாளர் படுகொலை: சந்தேக நபரின் புதிய புகைப்படம்

1 mins read

கோலாலம்பூர்: பாலஸ்தீன விரி வுரையாளர் ஒருவர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டதில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவரின் புதிய புகைப்படம் போலிசாருக்கு கிடைத்துள்ளது. நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மலேசிய போலிஸ் படைத் தலைவர் முகம்மது ஃபுஸி ஹருன் இந்த விவரத்தைக் கூறினார். அந்த விரிவுரை யாளரை நோக்கி துப்பாக்கியால் பல தடவை சுட்ட இரு சந்தேக நபர்கள் இரு மோட்டார் சைக் கிள்களில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அவர்கள் தப்பிச் சென்றதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று அந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் கோலாலம்பூர், ஏரிப் பகுதியில் கைவிடப்பட்டிருந் ததாக போலிசார் கூறினர். அவ்விரு சந்தேக நபர்களையும் போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கோலாலம்பூரில் வசித்து வந்த பாலஸ்தீன விரிவுரையாளர் ஃபாடி அல்-பாட்ஸ் சனிக்கிழமை பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிந்த வழியில் அடை யாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த அவரது உடல் நேற்று அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக் கப்பட்டு பின்னர் எகிப்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கோலாலம்பூர் தகவல்கள் கூறின.