யங்கூன்: ரோஹிங்யா அகதிகளின் பிரச்சினைகளை நேரில் சென்று கண்டறிய ஐநா குழுவினர் அங்கு செல்ல வுள்ளனர். இம்மாதம் 30ஆம் தேதி மியன்மார் செல்லவுள்ள ஐநா குழுவினர் அங்குள்ள ராக்கைன் மாநிலத்திற்கும் வருகை அளிக்கவிருப்பதாக அரசாங்க மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். ராக்கைன் மாநிலத்தில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து மியன்மார் ராணுவம் ஒடுக்குமுறையை பின்பற்றியது. அதன் பிறகு ஐநா உயர் மட்டக் குழு ஒன்று ராக்கைன் மாநிலத்திற்கு செல்லவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
மியன்மார் ராணுவத்தின் கடும் தாக்குதல்களைத் தொடர்ந்து ராக்கைன் மாநிலத் திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சுமார் 700,000 ரோஹிங்யா மக்கள் ராக்கைன் மாநிலத்திலிருந்து தப்பிச்சென்று பங்ளாதேஷில் தஞ்சம் அடைந் துள்ளனர். தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள ரோஹிங்யா அகதிகள் மியன்மாருக்கு திரும்ப முடியாமல் பல வேதனைகளை அனுப வித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

