கோலாலம்பூர்: வரும் மே 9 ஆம் தேதி நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் அடுத்த இரு நாட்களுக்கும் பொது விடுமுறை வழங்கப்படும் என பக்கத்தான் ஹராப்பான் தலைவர் மகாதீர் முகம்மது அறிவித்துள்ளார். "எனக்கு விடுமுறையில் விருப்பம் இல்லை, ஆனால் பலர் அதனை விரும்புகிறார்கள்," என திரு மகாதீர் பெட்டாலிங் ஜெயாவில் ஹராப்பான் வேட்பாளர்களுக்கான விளக்கக் கூட்டத்தின்போது தெரிவித்தார். வாக்களிக்கும் நாளான மே 9 ஆம் தேதி புதன்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் புத்ரா ஜெயாவை ஹராப்பான் கைப்பற்றினால், மலேசியர்கள் ஒரு நீண்ட ஓய்வெடுக்க ஏதுவாக இந்த 5 நாள் விடுமுறை அமையும் என்று அவர் தெரிவித்தார். இந்த ஆலோசனையை, முதன்முறையாக அமனா கட்சி தெரிவித்திருந்தது.
'எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் அடுத்த இரு நாட்களுக்கு விடுமுறை'
1 mins read

