கோத்தாபாரு: மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தை பாஸ் கட்சி தொடர்ந்து 28 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. எதிர்வரும் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்று கிளந்தானை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் பாஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. அந்த வரிசையில் பாஸ் கட்சி திங்கட்கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களையும் சலுகைகளையும் அக்கட்சி அறிவித்துள்ளது. இஸ்லாமிய சுற்றுலா மையமாக கிளந்தானை மேம்படுத்துவது, மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு முதல் பாஸ் கட்சி கிளந்தானை நிர்வகித்து வருகிறது. ஆனால் அந்த மாநிலத்தை வரும் தேர்தலில் கைப்பற்ற ஆளும் தேசிய முன்னணி மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. மே 9ஆம் தேதி நடக்கவுள்ள பொதுத்தேர்தல் பாஸ் கட்சிக்கு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கிளந்தானை தக்கவைத்துக்கொள்ள பாஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை
1 mins read

