நஜிப்: மகாதீரின் சிறந்த நடிப்புக்கு அவர் ஆஸ்கார் விருது பெற வேண்டும்

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது அவரது நிலையை எப்போதுமே மாற்றிக்கொண்டிருப்பதற்காக அவரை பிரதமர் நஜிப் ரசாக் கடுமையாகச் சாடி வந்துள்ளார். அந்த வரிசையில் திரு மகாதீரைப் பற்றி திரு நஜிப் தற்போது இவ்வாறு கூறியுள்ளார். திரு மகாதீரின் "கொள்கையற்ற வழிகளுக்காக" சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற அவர் தகுதியுடையவர் என்று திரு நஜிப் கிண்டலாகக் கூறியுள்ளார்.

"திரு மகாதீர் சிறந்த நடிகர். முன்பு கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஒரு பயங்கரமான நபர் என்று திரு மகாதீர் சபித்ததாக திரு நஜிப் கூறினார். மோசமான வார்த்தைகளால் அன்வாரை குறை கூறிய திரு மகாதீர், தற்போது அன்வாருடன் நட்புறவு கொண்டிருப்பதை குறிப்பிட்டு திரு நஜிப் பேசினார். நீதிமன்றத்திற்கு வெளியில் அன்வாரை திரு மகாதீர் சந்தித்து கைகுலுக்கியதை திரு நஜிப் சுட்டிக்காட்டினார். "மகாதீர் செய்தது போன்ற ஒன்றை என்னால் செய்ய முடியாது. அரசியலில் ஒரு மனிதர் அவசியம் கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும்," என்று திரு நஜிப் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.