கோலாலம்பூர்: அம்னோ கட்சி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தாலும் தேசிய முன்னணி வேட்பாளர்கள் நாளை 14வது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தடையின்றித் தாக்கல் செய்ய லாம் என்று அம்னோ சட்ட ஆலோசகர் முகம்மது ஹஃபாரி ஸாம் ஹருண் கூறினார். வேட் பாளர்களின் நியமனக் கடிதத்தில் பிரதமர் நஜிப் ரசாக் தேசிய முன்னணித் தலைவர் என்ற முறையில்தான் கையெழுத்திட்டுள்ளார், 'அம்னோ தலைவராக அல்ல. "மே 9 தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்கள் 13 கட்சிகளின் கூட் டணியான தேசிய முன்னணி சார்பில் தான் போட்டியிடுகிறார்கள். அவரவர் கட்சியின் சார்பில் அல்ல. "எனவே எதிரணி உள்பட சில தரப்புகள் தேசிய முன்னணி தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறுவது சரியல்ல," என்று அவர் சொன்னார். எது எப்படி யாயினும் வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட் பாளர்களின் தகுதி குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத் திடம்தான் உள்ளது என்றும் அவர் சொன்னார்.
மலேசியா: 'தேசிய முன்னணி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடலாம்'
1 mins read

