மெக்ரோன்: ஈரான் உடன்பாட்டை அதிபர் டிரம்ப் கைவிடுவார்

மெக்ரோன்: ஈரான் உடன்பாட்டை அதிபர் டிரம்ப் கைவிடுவார்

1 mins read
6a572210-0819-4d66-8bbf-fa90fd579844
-

வா‌ஷிங்டன்: ஈரானுடன் அனைத் துலக நாடுகள் செய்துகொண்ட உடன்பாட்டை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கைவிடுவார் என்று தாம் நம்புவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோன் கூறியுள்ளார். உள்நாட்டு காரணங்களுக் காக திரு டிரம்ப் சொந்தமாகவே அந்த உடன்பாட்டிலிருந்து விலகு வார் என்பது தனது கருத்து என்று திரு மெக்ரோன் கூறினார். மூன்று நாள் அமெரிக்கப் பயணத்தின் முடிவில் திரு மெக்ரோன் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார். அந்த உடன்பாடு குறித்து தீர்மானிக்க திரு டிரம்ப்பிற்கு மே 12ஆம் தேதி வரை நேரம் உள்ளது.

ஆரம்பத்திலிருந்தே திரு டிரம்ப் அந்த உடன்பாட்டை குறை கூறி வந்துள்ளார். திரு ஒபாமா அமெரிக்க அதிபராக இருந் போது 2015ஆம் ஆண்டு ஈரானுடன் அணுவாயுத உடன்பாடு காணப்பட்டது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளியல் தடைகளை அகற்று வதற்கு கைமாறாக அணு ஆயுதத் திட்டத்தை கைவிட ஈரான் இணங்கியது. அந்த உடன்பாடு குறித்த திரு டிரம்ப்பின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்த தான் எவ்வளவோ முயன்றதாகக் கூறிய மெக்ரோன், அந்த உடன்பாட்டை திரு டிரம்ப் கைவிட்டால் 'பெரிய ஆபத்து" ஏற்படும் என்பதை ஒப்புக் கொண்டார்.