போரகே தீவில் தூய்மைப்படுத்தும் பணிகள்

போரகே தீவில் தூய்மைப்படுத்தும் பணிகள்

2 mins read
c4395f91-4132-41e1-a1e4-9583fbd63547
-

மணிலா: பிலிப்பீன்சில் உள்ள பிரபல விடுமுறைத்தலமான போரகே தீவில் தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று தொடங்கின. சுற்றுலாப் பயணிகள் நாடிச் செல்லும் இத்தீவு கிட்டத்தட்ட 6 மாதங்கள் வரை மூடப்பட்டிருக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப் பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அங் கிருந்து வெளியேற்றப்பட்டனர். அத்தீவின் துறைமுகங்கள் நேற்று மூடப்பட்டன. அத்துடன் அத்தீவில் உள்ள ஹோட் டல்கள், உல்லாசத்தலங்கள், உணவகங் கள், மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு வேலை செய்த ஊழியர்கள் அனைவரும் விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். அத்தீவினுள் சுற்றுலாப் பயணி கள் நுழைவதைத் தடுக்க நுழைவிடங்களில் நூற்றுக் கணக்கான போலிசார் நிறுத்தப் பட்டுள்ளனர்.

இந்த 6 மாத காலத்தில் அத்தீவை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறும். சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஹோட் டல் போன்ற கட்டடங்களை இடித்து தகர்ப்பது, கழிவுநீர் கட்டமைப்பு வசதிகளை அதி கரிப்பது, முக்கிய சாலை அமைப் பது போன்றவை திட்டமிடப்பட்ட பணிகளுள் அடங்கும். முதல் கட்டமாக அத்தீவில் உள்ள புலாபாக் கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. போலிஸ்காரர் களும் தொண்டூழியர்களும் சேர்ந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அத்தீவில் மேற்கொள்ளப்படும் பணிகளை சுற்றுலாத்துறை அதிகாரிகள் மேற்பார்வையிடுவர். ஆறு மாதங்களுக்குப் பிறகு போரகே தீவு புதுப் பொலிவுடன் பல வசதிகளுடன் கூடிய விடுமுறைத் தலமாக விளங்கும் என்று பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

போரகே தீவில் உள்ள புலாபாக் கடற்கரையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் போலிஸ்காரர்களும் தொண்டூழியர்களும் ஈடுபட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்