இருநாட்டு உறவு மேம்பாட்டில் இந்தியா, சீனா ஆர்வம்

இருநாட்டு உறவு மேம்பாட்டில் இந்தியா, சீனா ஆர்வம்

2 mins read
84fceea2-1778-432b-8948-a9e9fc6e7e64
-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் நேற்று தனியாகப் பேச்சு நடத்தி னர். அந்த இரு தலைவர்களின் மொழிபெயர்ப்பாளர்கள் தவிர்த்து வேறு யாரும் அந்தக் கூட்டத்தில் இல்லை. இந்திய, சீன தலைவர்கள் மட்டும் பங்கேற்ற சந்திப்பு இது வரை கண்டிராத நிகழ்வு. மேலும் டோக்லாம் எல்லைப் பூசலுக்குப் பின்னர் இவ்விரு தலைவர்களும் முதல் முறையாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். 'இது ஒரு வியப்புக் குரிய அரசதந்திர நடவடிக்கை' என்று சீன அரசு ஊடகம் குறிப் பிட்டது.

மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் ஏரிகளும் பூங்காக் களும் நிறைந்த வுஹான் நகரில் இந்த உச்சநிலைக் கூட்டம் நடை பெற்றது. முன்னதாக வரவேற்பிற் காகப் போடப்பட்ட நீண்ட சிவப்புக் கம்பளத்தில் மோடி நடந்து வரும் வரை ஜின்பிங் காத்திருந்தார். பின்னர் மோடியை சீன அதிபர் வரவேற்றபோது இருவரும் பல நிமிடங்கள் கைகுலுக்கினர். பின் னர் கலாசார நிகழ்ச்சி ஒன்றிலும் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட் டது. "பிரதமர் மோடியை வரவேற் பதில் நான் பெருமகிழ்ச்சி அடை கிறேன். குறிப்பாக இந்த இள வேனிற்காலம் சந்திப்புக்கு ஏற்ற ஒன்று," என்று திரு ஜின்பிங் கூறினார்.

ஹுபெய் அருங்காட்சியகத்தில் இரு தலைவர்களும் பிற்பகல் உண வருந்தினர். ஏராளமான வரலாற்று, கலாசாரச் சின்னங்களை உள்ள டக்கியது அந்த அருங்காட்சி யகம். தமக்கு அளிக்கப்பட்ட உற்சாகம் மிகுந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்த மோடி, சீனாவின் உள்கட்டமைப்பையும் மின்திட்டங்களை யும் புகழ்ந்தார். இதற்கு முன்னர் குஜராத் மாநில முதல்வராக வுஹான் நக ருக்கு தாம் வருகை தந்ததை நேற்று திரு மோடி நினைவுகூர்ந் தார். "பெய்ஜிங் நகருக்கு வெளியே நீங்கள் வரவேற்ற முதல் இந்தியப் பிரதமர் நானாகத்தான் இருப் பேன்," என்று ஜின்பிங்கிடம் மோடி கூறினார். மோடிக்கு திரு ஜின்பிங் இரவு நேர விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். வுஹானிலுள்ள ஈஸ்ட் லேக் விருந்தினர் மாளிகையில் இந்நிகழ்வு நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது.

உதவியாளர்களைத் தவிர்த்து இந்தியப் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் தனியாக நடத்திய சந்திப்பு முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒன்று என்றும் இது ஒரு வியப்புக்குரிய அரசதந்திர நிகழ்வு என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டன. படம்: ஏஎஃப்பி