இந்தியாவும் சீனாவும் ஆப்கானிஸ் தானில் கூட்டாக பொருளியல் திட்டம் ஒன்றை மேற்கொள்ள இணங்கி இருக்கின்றன. சீனாவின் ஊஹான் நகரில் இந்தியப் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தச் சந்திப்பு சாதாரண நிலையில் இடம்பெற்ற இரண்டு நாள் உச்சநிலை சந்திப்பாக இருந் தது. அதில் இரு தலைவர்களுக்கும் இடையில் இந்த இணக்கம் ஏற் பட்டதாக அதிகாரபூர்வ தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தலைவர்களுக்கு இடை யிலான புரிந்துணர்வின்படி, இரு தரப்புகளையும் சேர்ந்த அதிகாரி கள், அந்தத் திட்டத்தை அடை யாளம் காண்பார்கள் என்று தெரி விக்கப்பட்டு இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் இத்தகைய கூட்டுத்திட்டம் இடம்பெறுவது இதுவே முதல்தடவையாகும். இதனிடையே, தங்கள் எல்லைப் பகுதியில் பணியில் இருக்கும் தங்களுடைய ராணுவங்களுக்கு இடையில் தகவல் தொடர்பை மேம்படுத்தவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. இதன்மூலம் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டு வது இலக்கு என்று இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். புதுடெல்லியும் பெய்ஜிங்கும் எல்லைப்புற வட்டார நிலைப்பாட்டிற் கான தகவல் தொடர்புகளைப் பலப்படுத்தவும் முடிவு செய்திருக் கின்றன என்று அந்த இந்திய அதிகாரி சனிக்கிழமை ஊஹான் நகரில் செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.
இந்தியாவும் சீனாவும் சாதா ரணநிலை பேச்சுவார்த்தை- களைத் தொடர்ந்து நடத்தும் என்றும் அவர் கூறினார். இதனிடையே, சீன அதிபரும் தானும் விரிவான முறையில் பலன் தரும் பேச்சுவார்த்தைகளை நடத் தியதாகவும் இரு நாட்டு உறவு களை வலுப்படுத்துவதன் தொடர் பில் கருத்துகளைப் பரஸ்பரம் பரி மாறிக்கொண்டதாகவும் இந்தியப் பிரதமர் மோடி, சீனாவின் இணையத்தளத்தில் தெரிவித்தார். இந்தியா=சீனா தலைவர்கள் உச்சநிலைப் பேச்சு நேற்று முடிந்தது.

