மலேசியா: பிரசாரம் தொடக்கம்

மலேசியா: பிரசாரம் தொடக்கம்

2 mins read
6942648c-c6c1-4b2b-9d50-82adfeb95559
-

மலேசியாவில் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முறையாகத் தொடங்கியது. நாட்டில் ஏறக்குறைய 61 ஆண்டுகால மாக ஆட்சி நடத்தி வரும் தேசிய முன் னணி கூட்டணிக்கு இதுவரையில் இல் லாதபடி முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது, 92, பெரும் சவாலாக உரு வெடுத்து இருக்கிறார்.

மலேசியாவின் 14வது பொதுத் தேர் தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முடிவடைந்தது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆதர வாளர்கள் பல்வேறு வேட்புமனு நிலையங் களிலும் குவிந்தார்கள். நாட்டில் 222 நாடாளுமன்றத் தொகுதி களுக்கும் 505 சட்டமன்றத் தொகுதி களுக்கும் ஒரே நேரத்தில் நடக்கவிருக் கின்ற தேர்தலில் ஏறக்குறைய எல்லா தொகுதிகளிலுமே கடும் போட்டி இருக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் தேர்தலில் மூன்றாவது அணி யாக பாஸ் கட்சி களத்தில் குதித்திருந் தாலும் பிரதமர் நஜிப், 64, தலைமையிலான தேசிய முன்னணிக்கும் முன்னாள் பிர தமர் மகாதீர் முகம்மதின் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. இத்தேர்தல், பிரதமர் நஜிப்புக்கு கடும் சோதனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பாயான் பாரு நாடாளுமன்றத் தொகுதியிலும் பத்து உபான் சட்டமன்றத் தொகுதி யிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை ராஜேந்திரா அம்மாசி, 50, என்பவர் எம்ஜிஆர் வேடமிட்டு வந்து தாக்கல் செய்தார். சென்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ராஜேந்திரா, அத்தேர்தலில் தான் செலவிட்ட தொகை தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யத் தவறிவிட்டதால் இப்போது அவருடைய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். படம்: தி ஸ்டார்