நஜிப், மகாதீர், வான் அஸிசா பலமுனைப் போட்டி

2 mins read
cebb3aaa-4014-48dd-983e-3a667da770f5
-

பெக்கான்: எதிர்வரும் தேர்தலில் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், பாகாங் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார். அம்னோ தலைவருமான திரு நஜிப் பெக்கான் தொகுதியில் உள்ள சுல்தான் ஹாஜி அகமட் ஷா மாநாட்டு மண்டபத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளாராக திரு நஜிப் போட்டியிடுகிறார். பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் திரு நஜிப்பை எதிர்த்து மூன்று பேர் போட்டி யிடுகின்றனர்.

பாஸ் கட்சி வேட்பாளர் அஹியாத்டுதின் டாவுட், பிகேஆர் சார்பில் போட்டியிடும் ஸாகிட் மாட் அரிஃப், சுயேச்சை வேட்பாளர் அப்துல் காதிர் சைனுதின் ஆகியோரே அந்த மூவர். ஸாகிட், முன்னாள் துணைப் பிரதமர் கஃபார் பாபாவின் பேரன் ஆவார். திரு நஜிப்புடன் மோத வேண்டாம் என்று பலர் ஆலோசனை கூறிய போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் கட்சியின் நலனுக்காக போட்டி யிடுவதாக ஸாகிட் கூறியிருக் கிறார். திரு நஜிப் உட்பட அந்த நான்கு பேர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியது. திரு நஜிப் 1976ஆம் ஆண்டிலிருந்து பெக்கான் தொகுதியில் நாடாளுமன்ற உறுப் பினராக இருந்து வருகிறார். இத்தொகுதியில் அவருக்கு நல்ல ஆதரவு இருந்து வருகிறது. 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் அத்தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

மலேசியப் பிரதமர் நஜிப், பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு அங்கிருந்து செல்கிறார். படம்: ஏஎஃப்பி