சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில், மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், கல்வித் துணையமைச்சருமான டத்தோ ப.கமலநாதன் மீண்டும் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இங்கு நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அவரை எதிர்த்துப் பிகேஆர் கட்சியின் சார்பில் பக்காத்தான் கூட்டணி வேட்பாளராக லியோவ் ஹிசியாட் ஹூய் போட்டியிடுகிறார். உலு சிலாங்கூர் தொகுதியில் பாஸ் கட்சியும் போட்டியிடுகிறது. பாஸ் சார்பில் வான் மாட் பின் சுலைமான் போட்டியிடுவதைத் தொடர்ந்து இங்கு நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
மலேசியா: உலுசிலாங்கூரில் கமலநாதன்; நான்குமுனைப் போட்டி
1 mins read

