மலேசியா: சிகாமட்டில் சுப்ராவை எதிர்த்து எட்மண்ட் சந்தாரா போட்டி

மலேசியா: சிகாமட்டில் சுப்ராவை எதிர்த்து எட்மண்ட் சந்தாரா போட்டி

1 mins read

சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் எதிர்ப்பார்த்ததைப் போலவே மஇகா தேசிய தலைவர் சுப்ரமணியத்தை எதிர்த்துப் பி.கே.ஆர் வேட்பாளர் எட்மண்ட் சந்தாரா போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளரான டாக்டர் சுப்ரா மும்முனைப் போட்டியை எதிர்கொள்கிறார். பாஸ் கட்சி சார்பில் கைருள் ஃபை‌ஷி போட்டியிடுகிறார். தொழிலதிபரான எட்மண்ட் சந்தாரா இத்தொகுதியில் சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ராவை எதிர்த்துப் போட்டியிடுவார் என்று ஏற்கெனவே பேசப்பட்டது. எதிர்பார்த்தபடியே அவர்கள் இருவரும் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.