மலேசியா: வேட்புமனு தாக்கல் செய்யும் வாய்ப்பை இழந்த சிவமலர் கணபதி

1 mins read

புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிடவிருந்த வழக்கறிஞர் சிவமலர் கணபதி பகாங் மாநிலத்தில் பிறந்தவர். இந்நிலையில், அவரது அடையாள அட்டையில் பகாங் மாநில முகவரி இருந்ததால், சிலாங்கூர் சட்டமன்றத்தில் போட்டியிட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடைசி நேரத்தில் சிவமலர் கணபதிக்குப் பதிலாக ஜவாரியா சுல்கிப்ளி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.